தொடர்ந்து 9 நாட்கள் உண்ணாவிரதம்; ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் வாபஸ் - என்ன காரணம்?
ஆசிரியர் சங்கங்கள் அடுத்தடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கின்றன.
ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் உள்ளிட்ட மூன்றுவகையான
ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டவந்தனர். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும்,
அரசு அறிவிப்பு
`எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்' எனக்கோரினர். ஒரு வார காலமாக குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என பலர் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியிலேயே முடிந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்த அமைச்சர் அன்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப்படும்.
171 தற்காலிக தொழில் ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்துக்கு கொண்டு வரும் அரசாணை வெளியிடப்படும் என்றார். அதன்படி, ஆசிரியர்கள் சங்கம் அரசின் அறிவிப்பை ஏற்று தங்களின் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர்.