தேவையே இல்லாமல் விக்கெட்டை இழந்த விராட் கோலி - வைரலாகும் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அவுட்டான விதம் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சொந்த மண்ணில் 100வது போட்டியில் களம் கண்ட அவர் வழக்கம் போல ஆஃப் ஸ்டம்ப் லைனில் வரும் பந்தை தொட்டு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பல ஆட்டங்களில் விராட் கோலி இப்படி ஆட்டமிழந்து வருவது அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அடிக்காமல் காத்திருக்கும் 71வது சதமும் தள்ளிப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.