திருச்செந்தூரில் கடல் திடீரென 150 அடிக்கு உள்வாங்கியது.. காரணம் என்ன?

Bakthi Murugan
By Sakthi Raj Sep 30, 2026 09:16 AM GMT
Report

திருச்செந்தூர் கடலை பொறுத்த வரையில் பொதுவாக அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவது சில நேரங்களில் அதிக சீற்றத்துடன் வெளியேறி வருவதும் இயல்பான ஒன்றாகவே பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் பௌர்ணமி என்பதால் திருச்செந்தூர் கடலில் இயல்பு நிலவு சற்று மாற்றம் ஏற்பட்டு நேற்று இரவு கோவில் நாழிக்கிணறு அருகில் இருந்து சந்தோஷ மண்டபம் வரை சுமார் 150 அடி தூரம் கடல் உள்வாங்கப்பட்டு காணப்பட்டது.

கடல் உள்வாங்கிய நிலையில் பாறையில் பாசிப்படைந்து வெளியே தெரிய துவங்கியது. மேலும், பொதுமக்கள் அவர்களுடைய பகுதிகளில் உள்ள கோவில்கள் திருப்பணி வேலைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது பழைய சிலைகளை புனித நீர் நிலைகளான ஆறு, ஏரி மற்றும் கடலில் போடுவது வழக்கம்.

திருச்செந்தூரில் கடல் திடீரென 150 அடிக்கு உள்வாங்கியது.. காரணம் என்ன? | Reason For Tiruchendur Sea Recedes 150 Feet

திருப்பதியில் சணல் பையில் லட்டு: பக்தர்களுக்கு புதிய முயற்சி

திருப்பதியில் சணல் பையில் லட்டு: பக்தர்களுக்கு புதிய முயற்சி

அவ்வாறு போடப்படும் சிலைகள் கடல் உள்வாங்கிய பொழுது கரை ஒதுங்கி வெளியே தெரிவதுண்டு. இதேபோல், நேற்று இரவு கடல் உள்வாங்கிய போது பெண் சுவாமி சிலையின் தலை மட்டும் வெளியே தெரிந்தது. அதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டெடுத்தனர்.

இருப்பினும் பக்தர்கள் வழக்கமாக புனித நீராடும் இடங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் பக்தர்கள் வழக்கம் போல் அவர்கள் நீராட எந்த தடையும் ஏற்படவில்லை. பிறகு மீண்டும் காலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இருப்பினும் திடீர் கடல் உள்வாங்குதல் நிகழ்வு சற்று பரபரப்பை பக்தர்களிடையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.