அண்ணாமலையார் கோவில் நந்தியின் சாய்வுக்கு என்ன காரணம்? ஆச்சர்ய தகவல்
நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் என்று பொருள். நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமக்கு நன்மையை அளிப்பார் என்பது நம்பிக்கை.
நந்தி
திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 8 நந்திகள் இருக்கின்றன. ராஜகோபுரத்தை கடந்ததும் ஐந்தாவது பிரகாரத்தில் முதலில் மிகப்பெரிய நந்தி ஒன்று தென்படும். இந்த நந்தி சுமார் 12 அடி உயரம் கொண்டது. மாட்டுப் பொங்கல் அன்று இந்த நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.

பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்வார்கள். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும்.
இதில் குறிப்பாக அண்ணாமலையார் நந்தியின் சாய்வுக்குக் காரணம், நந்தி தேவர் சிவனை வணங்கும் விதமாக தனது தலையைச் சற்று சாய்த்து, வடக்கு திசையை நோக்கி இருப்பதும், கால் மாற்றி அமர்ந்திருப்பதும் ஆகும். இது பக்தர்கள் சிவனை தரிசிப்பதற்கு முன் நந்தியிடம் அனுமதி பெறுவதைக் குறிக்கிறது.

தலையை வடக்கு திசையை நோக்கி சாய்த்திருப்பது, நந்தி தேவர் வடக்கு திசையில் உள்ள கைலாயத்தைக் குறிப்பதாகவும், இறைவனை தரிசிப்பதற்காகவும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் சேரும், பதவி உயர்வு கிடைக்கும்.