விக்ராந்தால் அவர் அம்மாவுக்கு நேர்ந்த பிரச்சனை? - ரசிகர்கள் அதிர்ச்சி

pandianstores Actresssheela Actorvikranth
By Petchi Avudaiappan Sep 24, 2021 08:51 PM GMT
Report

 பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிகை ஷீலாவின் கேரக்டர் திடீரென முடிக்கப்பட்டதற்கு அவரது மகனும், நடிகருமான விக்ராந்த் சந்தோஷ் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சத்யமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரின் அம்மாவாக நடிகர் விஜய்யின் சித்தியும், விக்ராந்தின் அம்மாவுமான ஷீலா நடித்து வந்தார்.

ஆனால் கடந்த வாரம் ஷீலா இறந்தது போன்று காட்டி அந்த கதாபாத்திரத்திற்கு என்டு கார்டு போட்டது ரசிகர்களிடையே பெரும் சந்தேகங்களை கிளப்பியது. ஷீலாவை சீரியலில் இருந்து நீக்குவதற்கு அவரின் மகனான நடிகர் விக்ராந்த் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விக்ராந்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவர் ஜீ தமிழ் சேனலில் வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ஷீலாவை சீரியலில் இருந்து நீக்கியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள நடிகை ஷீலா இதில் உண்மை இல்லை என்றும், கோலிவுட்டில் பல ஆண்டுகளாக இருந்தாலும் விக்ராந்துக்கு இன்னும் ஒரு பிரேக் கிடைக்காமல் இருப்பதால் அவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்றார் எனவும் தெரிவித்துள்ளார்.