உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட வராத ரஜினி ... காரணம் தனுஷா? - அதிரவைக்கும் தகவல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வராததற்கான காரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களித்தனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே வழக்கமாக தேர்தலில் முதல் ஆளாக வாக்களிக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை. தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அவர் புறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் எங்கே சென்றார் என்ற தகவலும் வரவில்லை.
இதற்கிடையில் மகள் ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து அறிவிப்பால் நொறுங்கி போயுள்ள ரஜினி வாக்களிக்க வந்தால் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பக்கூடும். இதனால் ஏற்படும் தர்ம சங்கடமான சூழலை சமாளிக்கவே அவர் வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அரசியலில் இருந்து பின்வாங்கிய ரஜினி தற்போது வாக்களிப்பதில் இருந்தும் பின்வாங்கி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.