பெண்களே..பீரியட்சுக்காக பயன்படுத்தும் உள்ளாடைகள் நிறம் மாறுகிறதா?- எதனால் தெரியுமா?..இதை படியுங்கள்!
மே 2-ம் தேதியான இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஜெர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நாளில் மட்டுமல்லாமல் பொதுவாகவே மாதவிடாய் பற்றியும் அதை சுற்றியுள்ள பிரச்சினைகளை பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்வது மிக அவசியம்.
பெண்களுக்கு சாதாரணமாகவே வெள்ளைபோக்கு ஏற்படுவது பொதுவாக நடக்ககூடியது தான், ஆனால் வெள்ளைபோக்கின் ஒவ்வொரு விதமான நிற மாறுதலுக்கும் உடல் சார்ந்த காரணங்கள் இருக்கிறது என நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.
அது போலவே மாதவிடாயின்போது வெளியேறும் இரத்தத்தின் நிற மாறுதலிலும் உடல் சார்ந்த ஏதோ ஒன்றை தான் அந்த நிற மாற்றம் மூலமாக நமது உடல் நமக்கு தெரியப்படுத்துகிறது. ஆனால் பல சமயங்களில் பெண்கள் இத்தகைய வெளிப்பாடுகளை கண்டுக்கொள்ளாமல் சாதாரணமாக கடந்து சென்று விடுகின்றனர். அதுவே பின்னாளில் பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.
இந்நிலையில்,டாக்டர். கியூட்டரஸ் என்ற பெயரில் பாலியல் நலன் நிபுணரான இருக்கும் மருத்துவர் தனாயா, மாதவிடாயின்போது பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் ஆரஞ்சு நிறமாக மாறுவதின் காரணம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
”பெண்களின் பிறப்புறுப்பில் எப்போதும் குறைவான PH-இல் திரவம் சுரப்பது இயல்பானது. அமிலத்தன்மையும், குறைவான PH காரணமாகவும் தான், மாதவிடாயின்போது வெளியேறுகிர ரத்தம் உள்ளாடைகளின் மீது படும்பொழுது, அந்த இடம் ஆரஞ்சு நிறத்தில் ப்ளீச் செய்ததைப்போல மாறுகிறது” என விளக்கம் அளித்திருக்கிறார்.
இதனால அடர்த்தியான நிறங்களில் உள்ளாடைகளை பயன்படுத்தும்போது, இப்படி ஆரஞ்சு நிறத்தில் தெரிவது இயல்பானது என்றும் இதைக் கண்டு பயப்படவேண்டாம் என்றும் நம்மில் பலருக்கும் இருந்துவந்த குழப்பத்திற்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மருத்துவர் தனாயா.