அப்செட்டாக்கினாரா அட்லீ?....ஜவான் ஆடியோ லான்ச்சை கண்டுகொள்ளாத நயன்..!!
நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் நிச்சயமாக பங்கெடுத்து கொள்வார் என கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.
ஜவான்
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்காக ப்ரோமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

பான் இந்தியன் படமான இதில் நயன்தாரா நாயகியாகவும், வில்லனாக விஜய் சேதுபதியும், சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்திற்காக சென்னையில் நேற்று பிரமாண்டமாக நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக் கான், விஜய் சேதுபதி, யோகிபாபு, இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லீ என பலரும் கலந்து கொண்டனர்.
ஏமாற்றத்தில் நயன்
இந்நிலையில், இந்த படத்தை எடிட் செய்து முடித்தவுடன் பார்த்துள்ள நடிகை நயன்தாரா பெரிய வருத்தத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா, அங்கேயும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை இந்த படம் உருவாக்கி தரும் என எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால், படத்தில் நயன்தாராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்துமே எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாரா ஏமாற்றமடைந்துள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கெடுத்துக்கொள்ளவில்லை என்ற கருத்துக்கள் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan