bloating ayurvedic remedies: அடிக்கடி வயிறு உப்புசமா? அதற்கான தீர்வு என்ன?

Stomach Ulcer
By Sakthi Raj Sep 22, 2026 09:06 AM GMT
Report

வயிற்று உப்புசம் என்பது பலருக்கும் அடிக்கடி ஏற்படும் செரிமானப் பிரச்சனையாகும். இது எப்பொழுதும் வயிறு நிறைந்தது போன்றும், இறுக்கமானது போன்றும் உணர செய்யும். சாப்பிட்ட பிறகு அடிக்கடி இது ஏற்படுவதோடு வாயு தொல்லை ஏப்பம் வயிற்று வலி ஆகியவற்றுடன் சேர்ந்து வரலாம். ஆனால், வயிறு உப்புசம் ஆபத்தானது கிடையாது.

ஆனால், அடிக்கடி ஏற்பட்டால் அவை மோசமான செரிமான பிரச்சனைகளாக இருக்கலாம். ஆயுர்வேதத்தின் அடிப்படையில் வயிறு உப்புசம் என்பது மிகவும் முக்கியமான வாத தோஷத்தின் சமநிலையின்மையால் ஏற்படக்கூடியதாகும். உடலில் செரிமானம் போன்ற அனைத்து இயக்கங்களையும் இந்த வாத தோஷம் தான் நிர்வகிக்கிறது.

bloating ayurvedic remedies: அடிக்கடி வயிறு உப்புசமா? அதற்கான தீர்வு என்ன? | Reason For Bloating And Ayurvedic Remedies For It

மேலும், செரிமான தீ பலவீன அடையும் பொழுது உணவு சரியாக செரிமானம் அடையாமல் உருவாகலாம். இதன் விளைவாகவே நமக்கு வாயு தொல்லை வயிறு உப்புசம் மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்படியாக, வயிறு உப்புசம் பிரச்சனைகளுக்கான சில ஆயுர்வேத தீர்வுகள் மற்றும் அவற்றை சரி செய்யக்கூடிய முறையை பார்க்கலாம்

 இஞ்சி:

இதற்கு உணவிற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பு புதிய இஞ்சியின் சிறிய துண்டு சாப்பிடலாம். சில நேரங்களில் சில துண்டு இஞ்சி தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இஞ்சி ஆகவும் குடிக்கலாம். அதோடு, சுக்கு பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஆயுர்வேத நிபுணரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மட்டுமே நாம் உட்கொள்ள வேண்டும். மேலும், ஆயுர்வேதத்தில் ஓமம் என்பது செரிமானத்தை மேம்படுத்தக்கூடிய மூலிகையாக கருதப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய தைமால் போன்ற இயற்கை சேர்மங்கள் மற்றும்  என்சைம்கள் செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுகிறது. நாம் கனமான உணவிற்கு பிறகு அரை டீஸ்பூன் வறுத்த ஓமத்தை எடுத்து மென்று சாப்பிடலாம்.

bloating ayurvedic remedies: அடிக்கடி வயிறு உப்புசமா? அதற்கான தீர்வு என்ன? | Reason For Bloating And Ayurvedic Remedies For It

அதனுடைய ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஓமத்தை கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக குடிக்கலாம். ஆயுர்வேதத்தில் சோம்பு என்பது செரிமானத்தை சீராக்குவதோடு உணவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய வயிற்று அசௌகரியத்தை குறைக்க உதவும் மூலிகையாக கருதப்படுகிறது. மேலும், உணவிற்கு பிறகு ஒரு டீஸ்பூன் சோம்பை மென்று சாப்பிடலாம்.

இல்லையென்றால் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் நசுக்கி சோம்பை 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குடிக்கலாம். அதோடு, சீரகம் கொத்தமல்லி மற்றும் சோம்பு சேர்த்து தயாரிக்க கூடிய இந்த மூலிகை பானம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு உணவிற்கு பிறகு ஏற்படக்கூடிய உப்புசத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

அதாவது, அரை டீஸ்பூன் சீரகம், மல்லி மற்றும் சோம்பு விதைகளை இரண்டு கப் தண்ணீரில் சேர்த்து சுமார் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி உணவிற்கு பிறகு அல்லது நாள் முழுவதும் நாம் சூடாக குடிக்கலாம்.

ஆயுர்வேதத்தின் அடிப்படையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை ஊக்குவித்து Ama (முழுமையாக செரிமானமாகாத கழிவுப் பொருட்கள்) சேர்வதை குறைக்க உதவும். மேலும், ஆயுர்வேதத்தின் அடிப்படையில் உணவிற்குப் பிறகு அதிக அளவு குளிர்ந்த நீர் குடிப்பது என்பது செரிமான அக்னியை தற்காலிகமாக பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

bloating ayurvedic remedies: அடிக்கடி வயிறு உப்புசமா? அதற்கான தீர்வு என்ன? | Reason For Bloating And Ayurvedic Remedies For It

என்னதான் மூலிகை வழியாக சில தீர்வுகளை மேற்கொண்டாலும். ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். அளவிற்கு அதிகமாக உண்பதை தவிர்த்து விட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிடுவதும் பசி எடுத்த பிறகு சாப்பிடுவதும் நல்லது.

அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட மற்றும் பொறித்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது. உணவுக்கு பிறகு சிறிது தூரம் நடை பயிற்சி யோகா தியானம் மற்றும் மூச்சு பயிற்சி வழியாக மன அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாம். தினமும் போதுமான நேரம் தூங்குவது அவசியம்.