திருமணம் முடிந்தவுடன் பெண்ணின் தந்தைக்கு அரிவாள் வெட்டு..காரணம் என்ன?
தஞ்சையில் திருமணம் முடிந்தவுடன் பெண்ணின் தந்தையை உறவினர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே உள்ளது நல்லிச்சேரி கிராமம். இந்த கிராமத்தை சார்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). இவர்களின் மகளுக்கு அய்யம்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அப்போது பெண்ணின் உறவினர்களான அழகர்சாமி, சிங்காரவேலன், விஜயகுமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். மேலும், திருமண பத்திரிகையில் தங்களின் பெயர் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணாதுரையை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அருகில் இருந்த காவல் துறையினர் அண்ணாதுரையை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அதாஹ்ன் பிறகு அண்ணாதுரையின் புகார் மற்றும் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்திய புகாரின் பேரில் அழகர்சாமி, சிங்கார வேலன், விஜயகுமார், மகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.