அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல்

V. J. Chitra
1 மாதம் முன்
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக சித்ராவின் பெற்றோர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் என தெரிவித்தனர். அப்போது சித்ராவின் தாய் சத்யா என்ற பெயரை குறிப்பிட்டார். அதேசமயம் சித்ராவின் தோழியும், நடிகையுமான ரேகா நாயர் ஹேம்நாத் மீது பல புகார்களை தெரிவித்தார். 

இதனிடையே ஒரு காலத்தில் விபச்சார வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை புவனேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்தான் சத்யா என கூறப்படுகிறது. இவர்  அரசியல் புள்ளிகளுக்கு சின்ன சின்ன நடிகைகளை சப்ளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலும் சத்யா அசுர வளர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சின்னத்திரையுலகில் ஸ்டார் நடிகையாக மாறிய சித்ராவுக்கு சத்யா மற்றும் சில மாபியா கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சித்ராவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருக்கும் விஷயங்கள் ஹேம்நாத்துக்கு தெரிய வந்ததால் பயந்துபோன சித்ரா ஹேம்நாத்தை காதலித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்வதில் அவருக்கு மனப்பூர்வ விருப்பம் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்  ஹேம்நாத்தும் பிசினஸ் மைண்ட் செட்டில் தான் சித்ராவுடன் பழகி வந்ததாகவும், பிரபல புலனாய்வு பத்திரிகையில் தகவல் வெளியாகியது. அதேபோல் சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தற்போது பணி ஒய்வு பெற்றுவிட்டார். அவர் பகிர்ந்ததாக சொல்லப்படும் தகவலில் சித்ராவின் ஹேண்ட் பேகில் கஞ்சா நிரப்பப்பட்ட 15 சிகரெட்டுகள், தீ பெட்டி ஆகியவை இருந்ததாக கூறப்படுவது நாளுக்கு நாள் சித்ரா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.