பவுலராக மாறிய ரன் மெஷின் : திடீரென பவுலிங் போட்ட கோலி.. என்ன காரணம் ?

virat bowling viratkohli practisematch
By Irumporai Oct 20, 2021 12:15 PM GMT
Report

இன்று இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

அதன்படி, ஆஸ்தி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதல் ஓவரில் 3 ரன்களை ஆஸ்தி., அணி எடுக்க, இரண்டாவது ஓவரில் அடுத்தது இரு விக்கெட்களை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஷ்வின் அசத்தினார்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விராட் கோலி ஏழாவது ஓவரை வீசி பெரும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். விராட் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை.

அடுத்த 4 பந்துகளில் ஸ்மித் இரண்டு ரன்களையும், மேக்ஸ்வெல் 2 எடுத்தனர். விராட் கோலி வீசிய ஓவரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 4 ரன்களை மட்டுமே எடுத்தனர்

மேலும், விராட் கோலி ஆட்டத்தின் 13வது ஓவரையும் வீசினார். இதில், ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களை கொடுத்தார்.

திடீரென விராட் கோலி பந்து வீசியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபிட்னஸ் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் ஒருவேளை பந்துவீசவில்லை என்றால் ஃபினிஷராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

எனவே 6வதாக இந்திய அணிக்கு பந்துவீச ஒரு ஆல்ரவுண்டர் கண்டிப்பாக தேவை என்ற சூழல் உள்ளது. இதனை சரிசெய்யவே விராட் கோலிக்கு ஓவரை கொடுத்து பரிசோதித்துள்ளார் ரோகித் சர்மா. 

டாஸின் போது பேசிய ரோகித் சர்மா, ஹர்திக் இன்னும் பந்துவீச தயாராக வில்லை. அவர் லீக் போட்டிக்குள் தயாராவார் என நினைக்கிறேன்.

இந்திய அணி 5 தரமான பவுலர்களை தான் வைத்திருக்கும். எனினும் 6வதாக ஒரு பவுலரை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

அதற்காக ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மூவரில் யாரேனும் பந்துவீசுவோம் எனக்கூறியிருந்தார். அதற்கேற்றார் போல கோலி இன்று பந்துவீசியுள்ளார் .