அயோத்தி ராமர் கோவிலில் காலணிகளை விட்டு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் - இப்படி ஒரு காரணமா?
அயோத்தி ராமர் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது காலணிகளை விட்டு செல்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவில்
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலர் அயோத்தியில் குவிந்தனர்.
தொடர்ந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு கடந்த ஒரு மாதமாக கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் காலணிகளை கோவிலிலே விட்டு செல்கின்றனர்.
குவியும் காலணிகள்
இதற்கு முன்னதாக முதல் நுழைவுவாயிலில் உள்ளே வரும் பக்தர்கள் அங்கே காலணிகளை விட்டு செல்லும் பக்தர்கள் கோவிலை சுற்றி பார்த்து தரிசனம் செய்து முடித்த பிறகு, அரை கிலோ மீட்டர் நடந்து, மீண்டும் தங்கள் காலணிகளை அதே முதல் நுழைவு வாயிலுக்கு வந்து அணிந்து சென்றனர்.
தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதல் நுழைவாயிலில் நுழையும் பக்தர்கள் 3வது நுழைவாயில் வெளியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் மீண்டும் 5 முதல் 6 கிலோ மீட்டர் வரை சென்று தங்களது காலணிகளை அணிய வேண்டும்.
இதனால் பெரும்பாலான பக்தர்கள், கோவிலிலே காலணிகளை விட்டு சென்றுள்ளதால் தினமும் மலை போல் காலணிகள் குவிகிறது. இவ்வாறு குவியும் காலணிகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ளி டிராலியில் சேகரித்து வெளியேற்றி வருகிறது அயோத்தி நகராட்சி நிர்வாகம்.