இந்த கிராமத்தில் ஆண்களுக்கு 2 மனைவிகள் கட்டாயம் - ஏன் தெரியுமா?
இந்திய கிராமம் ஒன்றில் ஆண்கள் 2 மனைவிகள் வைத்து கொள்ளும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
இரண்டு திருமணம்
இந்தியா பல்வேறு மொழி, கலாச்சார, பழக்கவழக்கங்களை பின்பற்றும் மக்களை உடைய நாடு ஆகும். ஆனால் சட்டப்படி இந்தியாவில் பலதார திருமணம் முறைக்கு அனுமதி இல்லை.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்ய வேண்டும் என்ற பழக்கம் உள்ளது.
ஆண் குழந்தை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில், ராம்தேயோ-கி-பஸ்தி என்ற சிறிய கிராமம் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த கிராமத்தின் மக்கள் தொகை 946 ஆகும்.
இந்த கிராமத்தில் தலைமுறையாக தலைமுறையாக ஆண்கள் இரண்டு திருமணம் செய்யும் முறை பழக்கத்தில் உள்ளது. இதற்கு காரணம் முதல் மனைவியால் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும், இரண்டாவது மனைவியால்தான் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இந்த கிராம மக்களிடம் உள்ளது.
இளந்தலைமுறை எதிர்ப்பு
ஆனால் இதற்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மக்கள் அந்த பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். இரு மனைவிகள் இருந்தாலும், மனைவிகளுக்கிடையே எந்த சண்டையும் வராதாம். வீட்டில் ஒரே சமையல் அறையில் ஒன்றாக தான் சமைப்பார்களாம்.
இங்கு இரண்டாவது திருமணத்தில் சிலருக்கு பெண் குழந்தைகளும் பிறப்பதால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பழக்கம் பெண்களின் உரிமையை பாதிப்பதாக தற்கால இளைஞர்கள் இந்த திருமண முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்கத்தை மாற்ற கூடாது என கிராமத்தின் பெரியவர்கள் கூறி வருகின்றனர்.