நடிகர் விஜய் சைக்களில் வாக்களிக்க வந்ததற்கு காரணம் என்ன? விஜய் தரப்பு விளக்கம்

vijay master thalapathi bike
By Jon Apr 06, 2021 11:24 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 27% வாக்குகள் பதிவாகியுள்ளன. திரைப் பிரபலங்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துவிட்டார்கள்.

இதில் நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தான் மறைமுகமாக விஜய் சொல்கிறார் எனப் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

சைக்கிளில் சென்று வாக்களித்ததை வைத்து அரசியல் ரீதியான கருத்துகள் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

அதில் கூறியிருப்பதாவது: "விஜய் சைக்கிளில் ஒட்டுப் போட வந்ததிற்கு ஒரே ஒரு காரணம் தான். வாக்குப்பதிவு மையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது.

அது ஒரு சின்ன தெரு என்பதால் காரில் சென்று வருவது இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.