ரியல் சிக்சர்.. ரொனால்டோவுக்கு, அன்புமணி பாராட்டு

twitt anubumani ronaldo
1 வருடம் முன்

செய்தியாளர் சந்திப்பின்போது விளம்பரத்துக்காக தன் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களைப் பார்த்த அவர் அதை தூக்கி அப்படியே ஓரம் கட்டிதண்ணீர் குடிங்க என பாட்டிலை தூக்கிக் காட்டினார்.

ரொனால்டோவின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்:

யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டில்களை அகற்றி விட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்த நிகழ்வு யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல், உடல் நலப் பாடம். பாராட்டுகள்.

கோகோ கோலோ ஆதரவுடன் நடந்த நிகழ்வில் இப்படிச் செய்ய தனித் துணிச்சலும், சமூக அக்கறையும் வேண்டும். இந்த நிகழ்வால் கோக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 30,000கோடி சரிந்திருக்கலாம். ஆனால், ரொனால்டோ சொன்ன பாடத்தின் மதிப்பு விலை மதிப்பற்றது ரியல் சிக்ஸர் என பாராட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.