பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா? - சோகத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ளாததற்கு நிகழ்ச்சி தொடங்கிய பின்னரும் அவரது ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை கையில் எடுத்தது.
இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதாவது முந்தைய சீசனில் கலந்து கொண்டு வெற்றிப் பெறாதவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் வெல்வதற்கான வாய்ப்பாக இது அமையவுள்ளது. இதனிடையே இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அரசியல் கட்சிகளையே தனது ஆர்மி மூலம் அசர வைத்த நடிகை ஓவியா பங்கேற்பார் என தகவல் வெளியானது.
ஆனால் உடல்நலக்குறைவால் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அந்த சீசனில் பங்கேற்ற சினேகன், ஜூலி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய 3 நாட்களைப் பார்க்கும் போது தலைவி ஓவியா இருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பா இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.