உண்மையான ஆண்கள், பெண்களை கொடுமைப்படுத்துவதில்லை : கேரள உயர்நீதிமன்றம்

Kerala
By Irumporai Jan 22, 2023 04:22 AM GMT
Report

பாலியல் துன்புறுத்தல் ஒன்றும் விளையாட்டு அல்ல, உண்மையான ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பாலியல் வழக்குகள் 

பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதிக்கப்படுவது குறித்து அதனைக் கட்டுப்படுத்தும் கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் இருந்து நாம் குழந்தைகளுக்கு, ஒழுக்கம் குறித்து கற்றுக்கொடுக்கவேண்டும்.

உண்மையான ஆண்கள், பெண்களை கொடுமைப்படுத்துவதில்லை : கேரள உயர்நீதிமன்றம் | Real Men Dont Bully Women Kerala High Court

கேரள நீதிமன்றம் கருத்து 

ஆரம்ப வகுப்பு முதல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒழுக்க நெறிமுறைகள் குறித்து கற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்று கூறியது. பாலியல் குற்றங்கள் ஏற்கத்தக்கது அல்ல, இது ஒன்றும் விளையாட்டு இல்லை, உண்மையான ஆண்கள், பெண்களை கொடுமைப்படுத்துவதில்லை, தொந்தரவு செய்வதில்லை என்பதை சிறுவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பலவீனமான ஆண்கள் தான் பெண்களை ஆதிக்கம் செலுத்தி துன்புறுத்துகிறார்கள் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.