41 ஆண்டுகளாக காட்டில் வாழும் மனிதர் : யார் அவர்?
வியட்நாமில் 41 ஆண்டுகளாக நாடுகளில் வசித்து வரும் மனிதர்கள் பற்றிய சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.
வியட்நாமின் காடுகளில் 40 ஆண்டுகளாக மனிதர்களின் வாசனையே இல்லாமல், குறிப்பாக பெண் பாலினம் குறித்த புரிதல் இல்லாமல் ஹோ வான் லாங் என்ற 49 வயது நபர் ஒருவர் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார்.
1970 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது ஹோ வான் குடும்பம் முழுமையாக சிதைந்துள்ளது. இதில் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் மற்றும் ஹோ வான் உடன் அவரது தந்தை காட்டிற்குள் அடைக்கலமாகியுள்ளார்.

தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில் காட்டில் கிடைத்த தேன்,பழங்கள், மற்றும் வன உயிரினங்களை சாப்பிட்டு மூன்று பேரும் உயிர் வாழ்ந்துள்ளனர். மேலும் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 5 பேரை மட்டுமே பார்த்ததாகவும், அதன் பிறகு தங்களது இருப்பிடத்தை மாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து 2013ஆம் ஆண்டு அருகில் உள்ள கிராமத்தினர் இவர்களை மீட்டெடுத்தனர். அதன் பிறகுதான் மூன்று பேரும் நாகரீக வாழ்க்கைக்கு மாறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.