தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரியல் ஹீரோ- நடுநடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள்

accident mumbai railway child life
By Fathima Apr 19, 2021 08:30 AM GMT
Report

மும்பையில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, தன் உயிரை பணையம் வைத்து நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மகாராஷ்டிராவின் மும்பை சராகத்திற்குட்பட்ட வாங்கனி ரயில்வே நிலையித்தின் 2வது ப்ளாட்பாரத்தில் பெண் மற்றும் குழந்தைகள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுகிறது, அந்நேரத்தில் ரயிலும் வர என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை காப்பாற்ற அவரது தாய் முயல்கிறார்.

பதட்டத்தில் அவராமல் இயலாமல் போகவே, எதிரே வேகமாக ஓடிவந்த ஊழியரான  Mr Mayur Shelkhe என்பவர், நொடிப்பொழுதில் குழந்தையை தூக்கி விட்டதுடன் தானும் ஏறி தப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை மத்திய ரயில்வே துறை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது, இக்காட்சிகள் வைரலானதுடன் தன் உயிரை பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றிய  Mr Mayur Shelkhe-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.