100 % பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறும் அரசு..! காலியானதா போராட்டம்..?? களநிலவரம் என்ன..?
இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருவதாக போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்து வரும் நிலையில், அரசு 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தம்
போக்குவரத்து சங்கங்கள் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ஆங்காங்கே தற்காலிக பணியாளர்கள் இயக்கும் பேருந்துகளையும் அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய அரசின் அறிவிப்பின் படி மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 2025 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 10 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 399 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1298 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2099 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1293 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1112 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1468 பேருந்துகளும் என 9704 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
களநிலவரம் என்ன..?
அரசு 100% பேருந்துகள் இயங்குவதாக கூறுகிறது. போக்குவரத்து சங்கங்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கிறது. இதில், உண்மையான களநிலவரம் என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம்.
போராட்டங்கள் நடைபெறும் போது, இருதரப்பும் தங்கள் ஆதரவான கருத்துக்களையே தெரிவிப்பது சகஜமான விஷயமே. ஆனால், இதில் மாற்றுக்கருத்துக்கும் இருப்பது உண்மை தான். சில இடங்களில் பேருந்துகள் சரியான நேரத்தில் இல்லை தான் மக்கள் குற்றம்சாட்டுவதையும் நாம் கேட்கிறோம்.