அரசியலில் இருந்து நான் ஒதுங்கி கொள்ள தயார் - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் நான் சந்தோசமாக ஒதுங்கிக்கொள்ள தயார் என கமல்ஹாசன் கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
வயது வித்தியாசத்தை உடைக்க வேண்டும்
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் அரசியல் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், இந்தியர்களின் வயது சராசரி 29 என குறிப்பிட்டார். அதே போல பாராளுமன்ற உறுப்பினர்களின் வயது சராசரி 54 ஆகும். இந்த வயது வித்தியாசத்தை முதலில் உடைக்க வேண்டும். எனவும்,

இந்த வயது வித்தியாசத்தை குறைக்க முதலில் நீங்கள் (மாணவர்களை கைநீட்டி) அரசியலுக்கு வரவேண்டும். எனக்கும் வ்யாதாகிவிட்டது நான் ஒத்துக்கொள்கிறேன்.
ஓய்வெடுக்க தயார்
நீங்கள் வந்துவிட்டு, இந்த நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் ஓய்வெடுங்கள் என கூறினால் , சந்தோசமாக ஒதுங்கி கொண்டு ஓய்வெடுப்பேன். என கூறினார்.
அதற்கு உங்களை நீங்கள் முழுதாக தயார்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன். இந்த விடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருந்தார்.
இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி #MCC கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. pic.twitter.com/8zg6mlmnUu
— Kamal Haasan (@ikamalhaasan) February 27, 2023