ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பிறகும் காளைகளை பரிசோதனை செய்ய தயார் - தமிழக அரசு
ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்த பிறகும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வாதம்
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும், காளைகள் குழந்தைகள் போல் பராமரிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? என தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஜல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பலியாவதாக மனுதாரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது எனவும் நீதிபதிகள் கூறினர். எல்லா செயல்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மனித உயிர்கள் பலியாகின்றன.
வாகன ஓட்டும் போது, பழங்கள் இடிந்து விழும்போது என எல்லா இடங்களிலும் மனித வாழக்கை முடிகிறது என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.