30 நாட்களை கடந்த போராட்டம்.. நான் பதவி விலக தயார் - ஷாக் கொடுக்கும் மம்தா பானர்ஜி!

West Bengal Mamata Banerjee Doctors
By Vidhya Senthil Sep 13, 2024 05:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

3வது நாளாக இன்று மருத்துவர்கள் - அரசு தரப்பின் பேச்சுவார்த்தை என்பது தள்ளிப்போயுள்ளது.

 கொல்கத்தா

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

mamta

மேலும்  பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், கொலைக்குத் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும், இந்த கொலையை மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள், காவல்துறையினரைப் பதவி விலகக் கோரியும் ஆர்.ஜி. கர் மருத்துவனை மருத்துவர்கள் 30 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கலைக்கப்படும் மம்தா ஆட்சி? வெடிக்கும் போராட்டம் - டெல்லி விரைந்த ஆளுநர்!

கலைக்கப்படும் மம்தா ஆட்சி? வெடிக்கும் போராட்டம் - டெல்லி விரைந்த ஆளுநர்!

இந்த நிலையில் 30 நாள்களுக்கு மேலாக மருத்துவர்கள் தொடர் போராட்டம் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, மருத்துவர்களை பணிக்குத் திரும்பும்படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது.

 மம்தா பானர்ஜி

ஆனால் மூன்று நாள் ஆகியும் மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில் தான் இரண்டு மணிநேரம் போராடும் மருத்துவர்களைச் சந்திக்கத் தலைமைச் செயலகத்தில் காத்திருந்ததாகவும், ஆனால், யாரும் வரவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

protest

மேலும் சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் நீதியை விரும்பவில்லை. அவர்களுக்கு நாற்காலி தான் வேண்டும்" எனக் குற்றம்சாட்டிய அவர் ,

பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் சில சட்டச்சிக்கல்கள் இருப்பதால்தான் மறுக்கிறோம் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.