அரசியலுக்கு அப்பாற்பட்டு புதிய அரசிற்கு ஆலோசனை வழங்க ரெடி- முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
admk
dmk
vijayabaskar
covi19
By Irumporai
கொரோனா காலக்கட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, புதிய அரசிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயாராக உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர் உலகளாவிய கொரோனா நோய் தொற்று இருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த நேரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, புதிய அரசிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயாராக உள்ளதாக கூறினார்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.