ஜெயலலிதா ஒரு இந்துத்துவாவாதி தான் - அடித்து சொல்லும் அண்ணாமலை!
இந்துத்துவா குறித்து அதிமுகவுடன் விவாதிக்கத் தயார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தின் பல தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டுள்ளனர். அதனால் பாஜக கூட்டணி தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெரும்.
பாராளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெரும். பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் தான், ஆனால் பாஜகவை விமர்சிக்கும் அளவுக்கு அரசியல் அனுபவம் இல்லாதவர். பிரதமர் மோடியை திட்டுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
2019 தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் டெபாசிட் கூட வாங்கவில்லை. பிரதமர் மோடி பேசுவதை எதிர்க்கட்சியினர் திரித்துப் பேசி வருகின்றனர். திருமாவளவன் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.
விவாதிக்கத் தயார்
திமுக கூட்டணியில் இருந்துகொண்டு திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அனைத்து இஸ்லாமியர்களையும் ஓபிசி பிரிவில் சேர்ப்பதை பாஜக எதிர்க்கிறது. நான் விவசாயி, மாட்டை சாமியாக பார்ப்பவன். அதை என்னை சமைத்து கொடுக்க சொல்வது என்ன நியாயம்.
மாட்டிறைச்சி சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இந்துத்துவ என்பது மதம் மட்டும் அல்ல, வாழ்வியல் முறை. ஜெயலலிதா ஒரு இந்துத்துவவாதி தான். ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரிவு 370 ஐ நீக்க வேண்டுமென ஜெயலலிதா பேசியுள்ளார். கரசேவை தவறான வார்த்தை அல்ல.
கரசேவைக்காக பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதை எதிர்க்கிறேன். ராமர் கோவில் கட்ட வேண்டுமென ஜெயலலிதா கையெழுத்து இயக்கம் நடத்தினார். ஜெயலலிதாவை இந்துத்துவவாதி என கூறுவதில் என்ன தவறு? இந்துத்துவா குறித்து அதிமுகவுடன் விவாதிக்கத் தயார்" என்று தெரிவித்துள்ளார்.