அஸ்வினை எதிர்க்க நாங்க ரெடி : சவால் விடும் இங்கிலாந்து கேப்டன்

viratkohli INDvsENG Joeroot
By Irumporai Sep 01, 2021 01:55 PM GMT
Report

இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இந்திய அணி ஒரு வெற்றியையும், இங்கிலாந்து அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது

. இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் நாளை லண்டன், ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் அளித்துள்ள பேட்டியில் :

உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேன் இந்தியாவின் கேப்டன் விராட்கோலி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்தத் தொடரில் விராட் கோலி பெரிய அளவில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்கச் செய்த பெருமை எங்களின் பந்துவீச்சாளர்களை சேரும். விராட் கோலியை விக்கெட்டை எடுக்கும் வழிமுறைகளை நாங்கள் கண்டறிந்து விட்டோம்.

அடுத்து வரும் போட்டிகளில் இதே முயற்சியை நாங்கள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடியை தருவோம். அவரின் விக்கெட்டை விரைவில் வேண்டும் என்பதே எண்கள் இலக்கு. அப்போதுதான் நாங்கள் தொடரை வெல்ல முடியும். அடுத்த டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அவரும் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒரு சுழல் பந்துவீச்சாளர்.

எங்கள் அணியின் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல், அதிக ரன்களையும் அவர் எடுத்துள்ளார். அடுத்த ஆட்டத்தில் அஸ்வின் களமிறங்க உள்ளதால், அதற்கு ஏற்றார்போல் நாங்கள் தயாராக இருக்கிறோம். அவருடைய பபந்துவீச்சை எதிர்கொள்ளவும், யார் வந்து வீசினாலும் சமாளித்து ரன் எடுக்கும் அளவில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார்.