சர்ச்சைக்குள்ளான கோலியின் விக்கெட்: பேட்டால் தரையை ஓங்கி அடித்தார்

virat kohli out
By Fathima Dec 03, 2021 10:26 AM GMT
Report

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலியின் விக்கெட் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

மழையின் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கிய நிலையில், 27-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

எனினும் நன்கு விளையாடிய ஷுப்மன் கில், தொடர்ந்து புஜாரா ஆட்டமிழக்க விராட் கோலி களமிறங்கினார்.

அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கோலியை எல்பிடபிள்யூ செய்தார் அஜாஸ் படேல். டக் அவுட் ஆன கோலி நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறையீடு செய்தார்.

பந்து முதலில் பேட்டில் பட்டதா அல்லது கால் காப்பில் (pad) பட்டதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் நடுவரின் முடிவை மாற்ற முடியாது என 3-ம் நடுவர் அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த கோலி, எல்லைக்கோடு அருகே சென்றவுடன் பேட்டால் தரையை ஓங்கி அடித்தபடி அறைக்கு சென்றார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பலரும் 3வது நடுவரின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.