கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு - எப்போது தெரியுமா?
கள்ளக்குறிச்சி கலவரத்தால் சேதமான பள்ளி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பள்ளியில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தார்.
இந்நிலையில், மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கேள்வி நீடித்துவந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின்படி, ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள பள்ளியின் தாளாளர், ஆசிரியர், முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் பள்ளியை முழுமையாக சேதமடையச் செய்தனர்.
இதில் பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்கள், வாகனங்கள், மாணவர்களின் ஆவணங்கள் போன்ற அனைத்தும் தீக்கிரையானது. இதனால் கனியாமூர் பள்ளி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவு
அதே சமயம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை வேறு இடத்தில் பள்ளி நிர்வாகம் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் தற்போது பள்ளி இன்னும் சில தினங்களில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளியில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.