கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய குழு அமைத்தது நீதிமன்றம்..!
கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கலவரமாக மாறிய போராட்டம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.
கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்.
இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் மாணவியின் வழக்கு தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.
இந்த நிலையின் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.மாணவியின் உடல் பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம்
விழுப்புரம் அரசு மருத்துமனை மருத்துவர் கீதாஞ்சலி,திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜுலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன்,தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.