காலியாக உள்ள பதவிகளுக்கு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திமுக அமோக வெற்றி
அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் வெற்றியை அக்கட்சியினர் வெகுவாக கொண்டாடினர். இந்த நிலையில் மேலும் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
மீண்டும் தேர்தல்
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் என மொத்தம் 510 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ந்தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.