RCB vs RR : டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு

IPL2O21 Toss RCBvRR
By Irumporai Sep 29, 2021 01:36 PM GMT
Report

2021 ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் துபாய் மைதானத்தில் இன்று மோத உள்ளன. இன்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணி,ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 24 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். இதில், பெங்களூரு அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் அல்லது விளையாடாமல் முடிக்கப்பட்டது. 2020 சீசனின்போது துபாய் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது.