ஆர்சிபி கோப்பையை வெல்ல காரணமே இதுதான் - போட்டுடைத்த புவனேஷ்வர்!

Royal Challengers Bangalore Bhuvneshwar Kumar IPL 2025
By Sumathi Aug 15, 2025 03:02 PM GMT
Report

ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து புவனேஷ்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி சாம்பியன்

ஐபிஎல் 18வது தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

bhuvaneshwar kumar

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆர்சிபி அணிக்காக விளையாடும் புவனேஷ்வர் குமார், ஆர்.சி.பி என்னை அல்லது விராட் கோலி உட்பட யாரை வாங்கினாலும் அவர்கள் தங்களுடைய சொந்த நட்பை தாண்டி களத்தில் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும்.

தோனியால் மன உளைச்சல்; ஓய்வு முடிவு - மனம் திறந்த சேவாக்!

தோனியால் மன உளைச்சல்; ஓய்வு முடிவு - மனம் திறந்த சேவாக்!

புவனேஷ்வர் புகழாரம்

களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இம்முறை ஆர்.சி.பி அணி அனுபவமிக்கதாக இருந்தது வெற்றியின் சிறந்த பகுதியாகும். ரஜத் அதிகமாக செய்வதற்கு எதுவுமில்லை. அவர் தயக்கமின்றி முடிவுகளை எடுத்தார்.

rcb champion

எப்போது முடிவுகளை மாற்ற வேண்டும், எப்போது அப்படியே விட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பதில் அவருடைய தரம் சிறந்தது. இம்முறை ஆர்.சி.பி அணியில் மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில் லெவனில் இருந்த வீரர்கள் அனைவருமே வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு போட்டிகளை வென்று கொடுத்தனர்.

பொதுவாகவே நீங்கள் ஓரிரு வீரர்களை சார்ந்திருந்தால் பெரிய தொடரை வெல்ல முடியாது. சில போட்டிகளில் பவுலர்கள் முன்னே வந்து அசத்தினார்கள். மற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அசத்தினார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒரு புதிய வீரர் வந்து எங்களுடைய வெற்றிக்கு உதவினார் எனத் தெரிவித்துள்ளார்.