காட்டடி அடித்த மேக்ஸ்வெல், ஸ்ரீகர் பரத் - அடிபணிந்த ராஜஸ்தான்

ipl2021 viratkohli RRvRCB maxwell
By Petchi Avudaiappan Sep 29, 2021 05:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ராஜஸ்தான்  அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 43வது ஆட்டத்தில் துபாய் மைதானத்தில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்களான ஜெய்ஸ்வால், லீவிஸ் ஆகிய இருவரும் பெங்களூர் பந்துவீச்சை வெளுத்தெடுத்தனர். 8.2 ஓவர்களில் 77 ரன்கள் குவிந்த இந்த ஜோடிக்கு பின் வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.

லீவிஸ் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 31 ரன்களும் எடுத்தனர். குறிப்பாக கடைசி ஓவரை வீசிய ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் அணியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி தரப்பில் ஹர்சல் படேல் 3, சாஹல், சாபஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் 50 ரன்களும், ஸ்ரீகர் பரத் 44 ரன்களும் விளாச 17.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

இதன்மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.