மீண்டும் மீண்டும் தோல்வி - ஐபிஎல் தொடரில் மும்பையை ஓட வைத்த பெங்களூரு

IPL2022 TATAIPL MIvRCB RCBvMI
By Petchi Avudaiappan Apr 09, 2022 07:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை  இழந்தனர். 

மீண்டும் மீண்டும் தோல்வி - ஐபிஎல் தொடரில்  மும்பையை ஓட வைத்த பெங்களூரு | Rcb Won The Match Against Mi

அதிகபப்ட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.. இதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. 

அணியில் டூபிளெசிஸ்  169, விராட் கோலி 48, அனுஜ் ராவத் 66 ரன்கள் குவிக்க  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் ஆடிய அந்த அணி 4 போட்டியிலும் தோல்வியை தழுவிய மும்பை புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.