பெங்களூருவிடம் போராடி தோற்றது லக்னோ அணி - சதத்தை தவற விட்ட டூபிளெஸ்சி
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நவி மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளெசிஸ் 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அவரின் அதிரடியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக க்ரூணல் பாண்ட்யா 42, கே.எல்.ராகுல் 30 எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 2 ஆம் இடம் பிடித்துள்ளது.