கத்துறதால மட்டும் RCB-க்கு கப்பு கிடைக்காது; இதை பண்ணனும் - விளாசிய முன்னாள் CSK வீரர்!

Chennai Super Kings Royal Challengers Bangalore Cricket Ambati Rayudu IPL 2024
By Jiyath May 23, 2024 04:07 AM GMT
Report

ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார். 

பெங்களூரு தோல்வி 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கத்துறதால மட்டும் RCB-க்கு கப்பு கிடைக்காது; இதை பண்ணனும் - விளாசிய முன்னாள் CSK வீரர்! | Rcb Vs Rr Ambatti Rayudu Trolls Virat Kohli Rcb

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. தோல்வியின் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.

CSK- க்கு கேப்டனாகி இருக்க வேண்டியது நான் தான்; ஆனால் நடந்தது.. போட்டுடைத்த வீரர்!

CSK- க்கு கேப்டனாகி இருக்க வேண்டியது நான் தான்; ஆனால் நடந்தது.. போட்டுடைத்த வீரர்!

அம்பத்தி ராயுடு 

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு "ஐபிஎல் கோப்பைகளை வெறும் கொண்டாட்டங்களாலும்,

கத்துறதால மட்டும் RCB-க்கு கப்பு கிடைக்காது; இதை பண்ணனும் - விளாசிய முன்னாள் CSK வீரர்! | Rcb Vs Rr Ambatti Rayudu Trolls Virat Kohli Rcb

ஆக்ரோஷத்தினாலும் வென்றுவிட முடியாது. கோப்பையை வெல்ல முதலில் பிளே-ஆஃப் மற்றும் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிஎஸ்கேவை வீழ்த்தினால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.