4 வருசத்துக்கு அப்பறம் வந்திருக்கோம் : கெத்தாக பேசிய கிங்கோலி

Virat Kohli
By Irumporai Apr 03, 2023 06:13 AM GMT
Report

வெற்றியுடன்தொடரை துவங்கியது மகிழ்ச்சியளிப்பதாகவிராட் கோலி கூறியுள்ளார்.

விராட் கோலி

மும்பை இந்தியனஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்யாசத்தில் அபாரா வெற்றி பெற்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (1), இஷான் கிஷன் (10), கேமிரான் க்ரீன் (5) போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இளம் வீரரான திலக் வர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்கள் குவித்தது.

4 வருசத்துக்கு அப்பறம் வந்திருக்கோம் : கெத்தாக பேசிய கிங்கோலி | Rcb Vs Mi Phenomenal Win Virat Kohli

போட்டி போட்டு வாணவேடிக்கை காட்டிய விராட் கோலி  டூபிளசி ஜோடியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு போட்டியின் 15வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிரித்தது. டூபிளசிஸ் 73 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.  

மும்பை இந்தியனஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்யாசத்தில் அபாரா வெற்றி பெற்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நான்கு ஆண்டுகள் காத்திருப்பு

இது குறித்து விராட் கோலி பேசுகையில், வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரும் வெற்றியாகும். 4 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் எங்களது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி அதில் வெற்றியும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத அளவிற்கு மைதானத்திற்கு ரசிகர்கள் அதிகமானோர் வந்துள்ளனர்.

4 வருசத்துக்கு அப்பறம் வந்திருக்கோம் : கெத்தாக பேசிய கிங்கோலி | Rcb Vs Mi Phenomenal Win Virat Kohli

அவர்களுக்காகவே இந்த போட்டியை சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்திருந்தோம். நெட் ரன் ரேட்டிற்கு தேவைப்படும் என்பதால் தான் போட்டியை விரைவாக முடிக்க முயற்சித்து 17வது ஓவரிலேயே வெற்றி பந்துவீச்சில் 17 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் திலக் வர்மா கடைசி இரண்டு ஓவர்களில் மாஸ் காட்டிவிட்டார், நிச்சயம் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும். கரண் சர்மா சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் என கூறியுள்ளார்.