புழுதிப்புயல் வீசுவதால் ஐபிஎல் போட்டி தொடங்குவதில் தாமதம் : சிங்கம் போல நிற்கும் தோனி

Sharjah ipl2021 sandstorm Toss CSKvRCB
By Irumporai Sep 24, 2021 01:49 PM GMT
Report

2021 ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் 35வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஐபிஎல் தொடரில், இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 26 போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இரு அணிகளும் மோதி கொண்டபோது, 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிரடி வெற்றி பெற்றது. 

 இன்று பெங்களூரு திட்டமிடும். சென்னையை பொருத்தவரை, பெங்களூரு அணியுடனான ஆட்டம் என்பது எப்போதும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் ஷார்ஜாவில் புழுதிப்புயல் வீசுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி தொடங்குவதில் தாமதமாகியுள்ளது.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீசுகிறது