“தம்பி போங்க அங்குட்டு” - பெங்களூருவை கதற விட்ட சென்னை அணி

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் சீசனின் 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் படிக்கல் 70 ரன்களும், கேப்டன் விராட் கோலி 53 ரன்களும் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 

முதல் 10 ஓவர்களில் பெங்களூரு அணி 90 ரன்கள் குவித்த நிலையில், பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அதனை பயன்படுத்த தவறினர். சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை அணி 157 ரன்கள் என்ற இலக்கோடு விளையாடி வருகிறது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்