பிரேவிஸ் அவுட் சர்ச்சை; யார் மீது தவறு? அம்பயரின் பாரபட்சத்தால் கொதிக்கும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
CSK vs RCB
இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. 214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.
அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே, 48 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
பிரேவிஸ் DRS சர்ச்சை
அப்போது, சென்னை அணி 16.2 ஓவர்களில் 172/3 என்ற நல்ல நிலையில் இருந்தது. அடுத்தாக கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிவோல்ட் பிரேவிஸ் களமிறங்கியதால், ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
நெகிடி, வீசிய புல்டாஸ் பந்தை எதிர்கொண்ட பிரேவிஸ், அதனை சிங்கில் தட்ட முற்பட்டார். ஆனால், பந்து பேடில் பட்டது. நெகிடி அப்பீல் செய்யவும், அம்பயர் உடனடியாக அவுட் வழங்கி விடுவார். இதனை கவனிக்காத பிரேவிஸ் மற்றும் ஜடேஜா 2 ரன்கள் ஓடி கொண்டிருந்தனர்.
இதன் பிறகு, பிரேவிஸ் அப்பீல் செய்த போது, DRS நேரம் முடிந்து விட்டதாக கூறி அம்பயர் DRS செய்ய மறுத்து விடுவார்.
DRS விதிப்படி, அவுட் கொடுத்த 15 வினாடிக்குள் மட்டுமே DRS கேட்க முடியும். பிரேவிஸ் DRS கேட்ட போது 20 வினாடிகளை கடந்து விட்டது.
[Z9O9FP
வழக்கமாக அவுட் கொடுத்த உடன் மைதானத்தில் உள்ள பெரிய திரையில், 15 வினாடி டைமர் ஓடும். ஆனால் இந்த போட்டியில் காட்டப்படவில்லை.
பாரபட்சம்
விதிமுறைப்படி நடுவர் அவுட் வழங்கிவிட்டாலே, எத்தனை ரன்கள் ஓடினாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. குறிப்பாக, DRS எடுத்து நாட்அவுட் என வந்தாலும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அப்படி இருந்தும் DRS எடுக்காமல் ரன்கள் ஓடியது CSK வீரர்களின் தவறாக கூறப்படுகிறது. அந்த பந்து ஸ்டம்பில் இருந்து விலகி செல்வதால் DRS எடுத்திருந்தால், அம்பயரின் முடிவு மாற்றப்பட்டிருக்கும்.
நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றதால், பிரேவிஸ் சிறிது நேரம் விளையாடியிருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கலாம்.
அதேவேளையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை வீரர் ரோஹித் சர்மா 15 வினாடி முடிந்த பிறகும், DRS கேட்டபோது அம்பயர் DRS வழங்குவார். மும்பை அணிக்கு ஒரு நியாயம் சென்னை அணிக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் அம்பயரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.