ராசி workout ஆகல - அணி பெயரை அதிரடியாக மாற்றிய RCB - புதிய ஜெர்சியும் அறிமுகம்

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2024
By Karthick Mar 20, 2024 04:51 AM GMT
Report

RCB அணி தனது பெயரை மாற்றி இந்த ஆண்டிற்கான புதிய Jersey'யையும் அறிமுகம் செய்துள்ளது.

RCB

பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள போதும், இது வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகின்றது. இந்த ஆண்டு அந்த அணிக்கு மற்றொமொரு நெருக்கடியாக பெண்கள் IPL தொடரில் ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான RCB அணி கோப்பியை வென்று அசத்தியுள்ளது.

ராசி workout ஆகல - அணி பெயரை அதிரடியாக மாற்றிய RCB - புதிய ஜெர்சியும் அறிமுகம் | Rcb Team Named Changed To Bangaluru

தொடர்ந்து 16 ஆண்டுகள் கோப்பைக்காக தவித்து வரும் அந்த அணி இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா..? என்ற எதிர்பார்ப்பில் அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துள்ளனர். இந்த ஆண்டு IPL தொடரின் முதல் போட்டியில் பலமான சென்னை அணியை RCB எதிர்கொள்ளவுள்ளது.

பெயர் மாற்றம் 

இதற்காக அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று RCB unbox என்ற பெயரில் அணியின் புதிய Jersey அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ராசி workout ஆகல - அணி பெயரை அதிரடியாக மாற்றிய RCB - புதிய ஜெர்சியும் அறிமுகம் | Rcb Team Named Changed To Bangaluru

ரெட் நிறத்தில் எப்போதும் களமிறங்கும் RCB அணியின் Jersey'யில் சற்று மாறுதல் செய்யப்பட்டு சிறிது Blue நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல, நீண்ட காலமாக இருந்த அணியின் பெயரை சற்று மாற்றி Royal Challengers Bangalore என்பதை Royal Challengers Bangaluru என மாற்றப்பட்டுள்ளது.