ஆர்சிபி அணியிலிருந்து விலகும் இரு இலங்கை வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி

Royal Challengers Bangalore Wanindu Hasaranga Dushmantha Chameera
By Anupriyamkumaresan Oct 11, 2021 01:51 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

டி 20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியின் கொரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். டி 20 உலக கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.

துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி 20 உலக கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி 20 உலக கோப்பை போட்டி கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆர்சிபி அணியிலிருந்து விலகும் இரு இலங்கை வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி | Rcb Player Dhushmantha Sameera Hasaranga Quit

இந்த நிலையில் டி 20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களான துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போடியிலிருந்து விலகியுள்ளார்கள்.

இருவரும் கொரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியதை ஆர்சிபி அணி உறுதிசெய்துள்ளது. இதனால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் இருவரும் இடம்பெற மாட்டார்கள்.