ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஏபி டிவில்லியர்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி

IPL2021 KKRvRCB abdevilliers
By Petchi Avudaiappan Sep 20, 2021 03:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் பெங்களூரு அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது புது ஹேர்ஸ்டைலால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அமீரகத்தில் அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாள் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதனிடையே 2 ஆம் நாளான இன்று பெங்களூரு - கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு  கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் கொல்கத்தா பவுலர்களின் ஆக்ரோசமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

குறிப்பாக கேப்டன் விராட் கோலி 5 ரன்கள், அதிரடி ஆட்டக்காரர் ஏபிடிவில்லியஸ் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். இந்நிலையில் இப்போட்டியில் டி வில்லியர்ஸ் களமிங்குவதற்கு முன்பு அவரது புது ஹேர்ஸ்டைல் காரணமாக கேமராக்கள் அவரை அதிகம் ஃபோகஸ் செய்தன. 

தலையில் ஒரு சிறிய குடுமி வைத்து, சுற்றி பேண்ட் கட்டி உட்கார்ந்திருந்த டிவில்லியர்ஸ் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.