ப்ளூ கலர் ஜெர்ஸியில் களமிறங்கும் ஆர்சிபி - காரணம் என்ன?

IPL 2021 rcb newjersey kkrmatch
By Irumporai Sep 14, 2021 10:06 AM GMT
Report

கொரோனா பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மே மாதம் பாதியில் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியை யுஏஇயில் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்தப் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.நிலையில் இந்தப் போட்டியில் ஆர்சிபி வழக்கமாக இருக்கும் சிவப்பு நிற ஜெர்ஸிக்கு பதிலாக ப்ளூ ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.

காரணம் என்ன:

இது தொடர்பாக ஆர்சிபி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இந்த முடிவை அறிவிக்கிறார்.

அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்முறை பச்சை நிற ஜெர்ஸிக்கு பதிலாக நில நிற ஜெர்ஸியில் ஒரு போட்டியில் விளையாட உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் வரும் வருமானம் உள்ளிட்டவற்றை மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் கொடுக்கப்படும் என்று ஆர்சிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருஞ்தொற்று காலத்தில் பிபிஇ கிட் அணிந்து அவர்கள் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இந்த நில நிற ஜெர்ஸியை ஆர்சிபி அணி அணிந்து விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.