மும்பை இந்தியன்ஸ் எல்லாம் கப் ஜெயிக்காது; இந்த டீம் தான் அடிக்கும் - சுனில் கவாஸ்கர்
மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றிகளை தக்கவைக்க முடியாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோப்பை யாருக்கு?
18-வது ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள 8 அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்று செல்வதற்கான போட்டி நிலவுகிறது.
இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முறையே தலா 14 புள்ளிகள் பெற்று பிளே ஆப் முன்னேறுவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் உள்ளன.
சுனில் கவாஸ்கர் கணிப்பு
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அந்த அணி நன்றாக பேட்டிங் செய்துள்ளது. ஃபீல்டிங்கும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அந்த அணிக்கு அருகே வந்திருக்கிறது. சமீபத்தில் அதிக வெற்றிகளைப் பெற்று எழுச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவெனில், அதை அவர்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என்பது தான்.
அடுத்து அவர்களுக்கு மூன்று கடினமான போட்டிகள் உள்ளன, சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளனர். அந்தப் போட்டிகளில் அவர்கள் எப்படி முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது தான் முக்கியம். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் ஐபிஎல் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி” என தெரிவித்துள்ளார்.