ஐபிஎல் வரலாற்றில் தோனியின் சாதனையை முறியடித்த ஜிதேஷ் சர்மா
நேற்றைய LSG க்கு எதிரான போட்டியில், RCB கேப்டன் ஜிதேஷ் சர்மா, தோனியின் ஐபிஎல் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
RCB அபார வெற்றி
18வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்(118), அதிரடியாக ஆடி சதமடித்தார்.
தொடர்ந்து, 228 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய RCB அணி, 18.4 ஓவர்கள் முடிவில், 230 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றி மூலம், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய RCB அணி, Qualifier 1 இல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஜிதேஷ் சர்மா சாதனை
இந்த போட்டியில், 6 வது வரிசையில் களமிறங்கிய RCB கேப்டன் ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி, 33 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தோனியின் சாதனை ஒன்றை ஜிதேஷ் சர்மா முறியடித்துள்ளார்.
சேசிங்கின்போது 6 அல்லது அதற்கும் கீழ் உள்ள பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள்(70) குவித்த வீரர்களின் சாதனை பட்டியலில் மகேந்திரசிங் தோனி, பொல்லார்டு, ரஸல் ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர்.
நேற்றைய போட்டியில், 6 வது வரிசையில் இறங்கி, 88 ரன்கள் எடுத்ததன் மூலம் ஜிதேஷ் சர்மா இந்த முறியடித்துள்ளார்.