அதிரடி மாற்றங்களோடு புதிய அவதாரம் எடுக்கும் ஆர்சிபி அணி!

rcb ipl newaddition
By Irumporai Aug 21, 2021 08:13 PM GMT
Report

கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் முடிந்த இரண்டே நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. எனவே வெளிநாட்டு வீரர்கள் அதற்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வரும் நிலையில் மாற்று வீரர்களுக்காக அணிகள் பல்வேறு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதுவரை நடந்த போட்டிகளில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது தற்போது நடப்பு ஐபில் தொடரில் இருந்து வெளியேறும் வீரர்கள் மற்றும் அதற்கு மாற்று வீரர்களை ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.

அதன்படி,  ஆடம் சாம்பாவுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் வனிடு ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ்க்கு மாற்றாக இலங்கையின் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிதாக சிங்கப்பூர் அணியை சேர்ந்த டிம் டேவிட் எனும் இளம் வீரரையும் ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது சிங்கப்பூர் தேசிய அணியில் சேர்ந்த ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூர் அணியில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அங்கு உள்நாட்டு தொடரான பிக் பேஸில் அதிரடி காட்டி கவனம் பெற்றார்.

மேலும் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கேடிச் தொடரில் இருந்து விலகி உள்ளதால்,மீதமுள்ள போட்டிக்கு மைக் ஹெசன் பயிற்சியாளராகவும் செயல்படுவார் என அணி நிர்வாகம் கூறியுள்ளது.