விராட் கோலி பற்றி வெளியான முக்கிய அப்டேட் ... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2022
By Petchi Avudaiappan May 16, 2022 03:01 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

விராட் கோலி குறித்து பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன்  முக்கிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளதால் அதில் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ஆனால் அந்த அணி மிக மோசமான நிலைமைக்கு விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தான் காரணமாக சொல்லப்படுகிறது. நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 236 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 முறை டக் அவுட்டாகி தனது கிரிக்கெட் பயணத்திலேயே மோசமான சீசனாக இதனை கொடுத்துள்ளார். 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்களில் வெளியேறிய அவர் வானத்தை நோக்கி கோவத்துடன் கத்தினார். இது ரசிகர்களை மனவேதனை அடைய செய்தது. இந்நிலையில் கோலி குறித்து பெங்களூரு அணி பயிற்சியாளர் மைக் ஹெசன் முக்கிய தகவலை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் விராட் கோலி தற்போது ஃபார்முக்கு வந்துவிட்டார். அவரின் ஆட்டம் முன்பை போன்றே ஆக்ரோஷமாக உள்ளது என்றும்,  அவர் பந்தை எதிர்கொண்ட விதம் நம்பிக்கையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். எனவே நேற்று அவரின் நாளாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் காலம் அதுபோன்று நினைக்கவில்லை. கோலி தற்போது யாரும் நினைத்து பார்க்காத மன உளைச்சலில் உள்ளார். 

ஆனால் இனி கோலியிடம் இருந்து அதிரடி ஆட்டங்களை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.