“ஸ்வீட் எடு...கொண்டாடு”.... மும்பையின் வெற்றியை கொண்டாடிய பெங்களூரு அணியினர் - வைரலாகும் போட்டோக்கள்

Virat Kohli Mumbai Indians Royal Challengers Bangalore IPL 2022
By Petchi Avudaiappan May 22, 2022 12:36 AM GMT
Report

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியினர் வெற்றி பெற்றதை பெங்களூரு அணியினர் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் டெல்லி அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது. அதேசமயம் மும்பை அணியின் வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

“ஸ்வீட் எடு...கொண்டாடு”.... மும்பையின் வெற்றியை கொண்டாடிய பெங்களூரு அணியினர் - வைரலாகும் போட்டோக்கள் | Rcb Celebrate Mi Victory

முன்னதாக இந்த ஆட்டம் தொடங்கும் முன் எப்படியாவது மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என பல மீம்ஸ்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியது. இந்த போட்டி முழுவதையும் பெங்களூரு அணி வீரர்கள் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து பார்த்த புகைப்படம் முதலில் வெளியானது.

“ஸ்வீட் எடு...கொண்டாடு”.... மும்பையின் வெற்றியை கொண்டாடிய பெங்களூரு அணியினர் - வைரலாகும் போட்டோக்கள் | Rcb Celebrate Mi Victory

அதேபோல் மைதானத்தில் கூடிய ரசிகர்களில் பலர் பெங்களூர் அணியின் ரசிகர்கள் தான் என்பதை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். 

இந்நிலையில் மும்பை அணியினர் வெற்றி பெற்றதை பெங்களூரு அணியினர் கொண்டாடிய  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் பெங்களூரு வீரர்களும், நிர்வாகமும் மும்பை அணிக்கு நன்றி தெரிவித்த ட்வீட்களும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.